Saturday, July 21, 2007

டென்வர் டிரிப்பு ...அளவில்லா பூரிப்பு...

கூடி கூத்தாட
சென்றோம் DENVER...
உரையாடி உறவாக
பெற்றோம் புதுஅன்பர்

"பழக வாருங்கள்!!! பழக வாருங்கள்!!!"
என்றொலித்தது வரவேற்பு
வயிற்றுக்கு அண்ணமும் மனதிற்கு வண்ணமும்
அள்ளித்தந்தது புதிதாய் பூத்த நட்பு

தெரிந்த நண்பர்களைப் போல்
விளையாடி உரையாடி மகிழ்ந்தோம்
நேரம் போனது தெரியாமல்
கண்விழித்து மனமிழைந்துக் கிடந்தோம்

இரவு பகலாகிய நேரத்தில்
உறங்கச் சென்றன் விழிகள்
காலைக் கதிரவன் எழுப்ப
கும்மாளம் போட தயாராகின கால்கள்

அரைத்த மாவில் தோசையும்
மணமணமக்கும் சாம்பாரும் நாவிலூர
பாறைக் குன்றுகளைப் பார்க்க
புறப்பட்டோம் உற்சாகம் பறைசாற்ற

மலை முகடுகளும் புல்வெளிப் பரப்புகளும்
அரவணைத்துக் கொள்ள பயணுற்றோம்
இயற்கையின் அழகை புகைப்படங்களாய்
ஆட்கொண்டு மெய்மறந்து போனோம்

மழைச்சாரல் மனதை மயக்க
காய்ந்த ரொட்டியை பசித்து புசித்திட
செந்தூரின் கேமிரா இயற்கையை
இயற்கையாக படம்பிடித்து எழில்காட்டிட

மலையடிவாரத்தில் வந்து சேர்ந்தனம்
மேலும் நல்லுள்ளங்கள் கூடினர்
கூடாரங்கள் கட்டுமாணப் பணிகள்
விறுவிறுவென நடந்தது.. மகிழ்ச்சியில் ஆடினர்

பாட்டுக்கு எதிர் பாட்டு ஒலித்தது
அருகிலிருந்த கூடாரப்பூச்சிகள்
நெருங்கி வந்து செய்த
மிரட்டலும் அதட்டலும் கூடவே ஒலித்தது

இரவு குளிரின் தாக்கத்தால்
உறங்க மறுத்தது விழிகள்...
விடிகாலைச் சூரியனுக்கு வழிவிட
ஒதுங்கின சந்திரனுடன் நட்சத்திரங்கள்...

பல்துழக்க மறுத்த மனமோ
STARBUCKS-யின் காபியை நோக்கிச் செல்ல
சிறுநதி ஓடையாய் விரிந்தோட உரையாடல்கள்
எல்லோர் மனதையும் வெல்ல

எழில் கொஞ்சும் மலைமுகடின்
தலைமுகிடைத் தொடப் புறப்பட்டனம்
வழியெங்கும் வெள்ளை முகில்களும்
பசும்புல்பரப்புகள் அழகிற்கு அழகுசேர்த்தனம்

அதன் பின்னே,அருவி பார்க்க பயணித்தனம்
நினைவு தொலையாத யாம் வழி தொலைந்தனம்
சுதாரித்துக் கொண்டு போல்டர் வந்தனம்
அருவிப் பார்த்து உள்ளம் குளிர்ந்தனம்

பாட்டுக்குப் பாட்டு அது பழைய விளையாட்டு
அந்தரப்பாடல் வரிகளைக் கொண்டு
பாடலைக் கண்டுகொள்ளும் விளையாட்டு
விளையாடினம் யாம் மெட்டுபோட்டு

உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடையாத
எம்முள் சுடர் விட்டது அந்த சோக ஏக்கம்
ஊர் பார்த்து திரும்பும் நேரம் வந்ததை
உணர்ந்தனம்.. நெஞ்சோடு உதித்தது பாரம்

விடைபெற மனமில்லாத உள்ளங்கள்
மறந்தாலும் அழியாத நினைவுகள்
உள்ளத்தால் பிரிய மனமில்லாமல்
"பிரிவோம் சந்திப்போம்" என்றன உதடுகள்

நட்பு பிரிவதிலும் சுகமோ
அதை உள்ளங்கள் தான் ஏற்குமோ
எண்ணங்கள் மனதில் பாய யாம் யோசித்தனம்
"அடுத்து எங்கு எப்போது சந்திப்போமோ??"

விடை வாங்கின விழிகள்
பொய் "BYE BYE" கூறின உதடுகள்
பயணித்தோம் அவரவர் ஊரிற்கு
மனதில் கணங்களா?? இல்லை சந்தோசக்கனங்களா??

லேசாய் என்னுள் ஒரு சிரிப்பு...
ஏன்????
"எங்கடா மச்சி அடுத்த டிரிப்பு??"

0 Comments:

Post a Comment

<< Home